VVIP சென்னைக்கு 03-04-2026 மற்றும் 04.04.2026 ஆகிய இரண்டு நாட்களுக்கு வருகை வரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகள் மற்றும் VVIP பயணிக்கும் வழித்தடங்கள் “சிவப்பு மண்டலமாக (RED ZONE)” அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, 03-04-2026 மற்றும் 04-04-2026 ஆகிய இரண்டு நாட்கள் மேற்குறிப்பிட்ட இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் (Unmanned Aerial Objects) பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023- ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர் கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 24-03-2026 முதல் 22-05-2026, வரை தடைசெய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
In view of the visit of the VVIP to Chennai on 03-04-2026 and 04-04-2026 the areas around Meenambakkam, Guindy and the routes to be traversed by the VVIP in Greater Chennai Police limits have been declared as “RED ZONE” and flying of Drone Cameras and Unmanned Aerial Objects have also been banned in the aforementioned areas in Chennai on 03-04-2026 and 04-04-2026 except the Government arrangements.
The promulgation of orders under section 163 of the Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023 and sub-section (2) of section 14 of BNSS, 2023 prohibiting use of drones, remote controlled micro-light aircrafts, para gliders, Para Motors, Hot air balloons etc., is already in force from 24-03-2026 to 22-05-2026 in Greater Chennai Police limits.
#GreaterChennaiPolice #ChennaiPolice #PublicSafety #DroneBan #RedZone #TrafficAdvisory #SecurityAlert #VVIPVisit