#பாசறைபக்கம்
#முரசொலி
#1000வதுபக்கம்
ஒவ்வொரு நாள் காலையிலும் பத்திரிக்கைகள் வாசிக்கும் போதும் ஒரு சில செய்திகள் நமது ஆர்வத்தை தூண்டும் அதே போல சில நாட்களில் வரும் Column முக்கியமானதாக இருக்கும், உதாரணமாக ஒவ்வொரு ஞாயிறுகளிலும்
@IndianExpress ல் ஒன்றிய முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவர்
@PChidambaram_IN அவர்கள் தொடர்ந்து எழுதிய
#Acrosstheaisle அதே போல குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை டெல்லி அரசியலில் கால் பதிக்க ஊடகத்தில் startegy வகுத்து அதற்காக எழுதியவர்களில் முக்கியமான
@tavleen_singh எழுதும்
#FifthColumn
அதே போல
@the_hindu வில் வரும்
#Oped மற்றும்
#Editorial ஞாயிறுகளில் வரும்
#Profiles யில் பல்வேறு அரசியல் மற்றும் பிறதுறை ஆளுமைகள் பற்றி வரும் இன்று பத்திரிக்கையாளர்
@SobhanaNair எழுதிய A keen Negotiator என்ற தலைப்பில்
#ChiragPaswan பற்றி வந்தது. மேலும் வெள்ளிக்கிழமைகளில்
#TamilnaduInFocus ல் தமிழ்நாட்டின் அரசியல், வரலாறு, கலை, இலக்கியம் பற்றி சுவாரஸ்ய தகவல்களோடு வரும். அதே மாதிரி
#TextandContext குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நமது இளம் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன்
@Udhaystalin அவர்கள் முன்னெடுப்பில் வரும்
#பாசறைபக்கத்தை வாசிக்க அவ்வளவு ஆர்வமாக இருக்கும்.
#முரசொலி தொடங்கப்பட்டு சில ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் எனும் தலைவர் தன் இனம் அறிவார்ந்த இனமாக வளர வேண்டும் உலக அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவ்வளவு மெனக்கிட்டிருப்பார்.
தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு பத்திரிக்கையும் வெளியிடும் மலரில் பெரும்பாலும் நடிகர், நடிகைகளை பற்றிய செய்திகள் தான் அதிகம் இருக்கும். 7, 8 ஆண்டுகளுக்கு முன் முரசொலி பவள விழா அரங்கை பார்வையிட்ட போது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட முரசொலி பொங்கல் மலரின் சில பகுதிகளை பார்க்க முடிந்தது. அதில் 1956 ஆண்டு மலரில் ஆர்க்கிமிடிஸ், மேடம்க்யூரி, எடிசன், மைக்கேல் ஃபாராடே, கலீலியோ, அலெக்சாண்டர் ஃபிளமிங், ஐன்ஸ்டீன், டார்வின், ஜெகதீஷ்சந்திரபோஸ் அவர்களை பற்றிய செய்தி இருந்தது.
மேலும் 1957 மலரில் அறிஞர் உலகம் என தலைப்பிட்டு புத்தர், இயேசு, சாக்ரடீஸ், சேக்ஸ்பியர், மார்க்ஸ், லிங்கன், ரூசோ, காந்தி, பெரியார், நேரு, அண்ணா போன்ற ஆளுமைகள் பற்றிய செய்தி இருந்தது.
தவிர 1959 மலரில் சர்வதேச பிரச்சனைகள் பற்றிய குறிப்புகளில் எகிப்து, லெபனன், பர்மா, பாகிஸ்தான், துரூக்கி, ஈராக் விவகாரங்களை விவரித்திருக்கிறார்.
இந்தியாவில் வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தன் தொண்டன் அறிவார்ந்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்பமாட்டார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் தனது அரசியல் என்பதே தமிழன் சுயமரியாதையோடு, பகுத்தறிவோடு சிந்தித்து உலக தரத்திற்கு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது தான்.
மற்றொன்றையும் குறிப்பிட வேண்டும்.... திராவிட இயக்க தீரர் நினைவு நாள் குறிப்பில் அண்ணன்
#சைதை_கிட்டு மற்றும் அய்யா
#என்விநடராசன் குறித்த புகழஞ்சலியை ஒரு முறை பார்த்தேன். "சைதை கிட்டு செயலில் சிட்டு" என்பது நமக்கு நன்கு பரிச்சயமான சொல்லாடல்... அதற்கு அடுத்தபடியாக என்விஎன் பற்றி வாசிக்கும் போது "சென்னையின் முதல் மாவட்ட செயலாளர் என்று தொடங்கி.... "திமுக கழக
#மாலடோவ் என்விஎன் என்று கலைஞர் பெருமையாக சொல்வார் என்று குறிப்பிட்டிருந்தது.
1975 ல் மறைந்த என்விஎன் பற்றி பெருமையாக அவர் குறிப்பிட்ட மாலடோவ் வரலாறு (Molotov plan) ..... என்பது ஐஏஎஸ் தேர்வுக்கு நான் படித்த போது தெரிந்து கொண்டது.... கலைஞர் எத்தகைய ஆழமான சிந்தனையாளன், தன் உடன்பிறப்பை யாரோடு ஒப்பிட்டு பெருமைப்படுத்துகிறார் என்று பாருங்கள்.... அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் பனிப்போரில் இருந்த காலம்..... இரு நாடுகளும் தங்களுடைய செல்வாக்கை பறைசாற்றி கொண்ட தருணம்... அமெரிக்க அதிபராக இருந்த
#HarryTruman ஐரோப்பிய நாடுகளை தங்களது ஆதரவு வளையத்துக்குள் கொண்டுவந்து ரஷ்யாவுக்கு நெருக்கடி தர நினைக்கிறார். அதிபரின் இந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க அப்போது Secretary of State ஆக இருந்த
#GeorgeMarshall திட்டம் வகுக்கிறார். அது தான்
#MarshallPlan 1947 (யுபிஎஸ்சி ல பத்து மார்க் கேள்வி) அதாவது.... உலகப் போரில் பாதிப்படைந்த ஐரோப்பிய நாடுகளை பாதிப்பிலிருந்து மீட்டு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான பொருளாதார உதவியை அமெரிக்கா வழங்கும்.... என்பது தான் திட்டம். அமெரிக்க முன்னெடுத்த இந்த திட்டத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்துவிடுமோ என்று யோசித்து அதற்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்தார் ரஷ்ய அதிபர்
#JosephStalin . அதன் விளைவு தான் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்
#Vyacheslav_Molotov உருவாக்கிய Molotov plan...
1/2