திமுக ஆட்சியில, நாலு மாசத்துக்கு முன்னாடியே மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கி, அவங்ககிட்ட வழங்கப்பட்டு, அவங்க பயன்படுத்தி வந்த வாகனங்களை எல்லாம் இப்ப திரும்பவும் வாங்கிட்டு. அதுல இந்த தவெக அரசோட ஸ்டிக்கரை ஒட்டி, 'ஏதோ நாங்கதான் புதுசா தர்றோம்' அப்படின்னு அமைச்சர் விஜய் பாலாஜி திரும்பவும் மக்களுக்கு வழங்குறார். என்ன ஒரு கூத்து இது!
ஒரு பக்கம் பார்த்தா, அந்த டம்மி CM டெல்லிக்கு போயி, திராவிட மாடல் ஆட்சியோட சாதனைகளை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தன் பேர்ல எழுதிட்டு இருக்கார். இங்க இருக்கிற அவரோட அமைச்சர்களும் தலைவனை போலவே எந்த ஒரு சூடு, சுரணையும் இல்லாம, திராவிட மாடல் ஆட்சியில மக்களுக்கு கொடுத்த வாகனத்தையே திரும்ப வாங்கி ஸ்டிக்கர் ஒட்டி நாடகம் ஆடுறாங்க!
மாற்றுத்திறனாளிகளை இப்படி அலைக்கழிச்சு, அவங்கள வச்சு அரசியல் பண்றதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்லையா? உருப்படியா நீங்களா சொந்தமா ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து அதைச் செயல்படுத்திப் பாருங்க பார்ப்போம். மத்தவங்க உழைப்புல, மத்தவங்க திட்டத்துல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேடுற வேலையை இதோட நிறுத்திக்கோங்க!
#TVKFails