தமிழ்நாடு மாநில திருநங்கையர் பாலிசி - 2025
( ஆம், திருநங்கையர் பாலிசி, திருநர்களுக்கான தனி பாலிசி என்று போராடி, இப்போது அது திருநங்கையருக்கும் மட்டுமான பாலிசி. )
2006 முதல்முறை கூவாகம் திருவிழாவிற்கு சென்றிருந்த போது, குங்குமம் நிருபர் ஒருவர் என்னையும், மூத்த திருநங்கை ஒருவரையும் சேர்த்து ஒரு நேர்காணல் செய்தார். அப்போது நான் திருநங்கைகளுக்கு கல்வி/வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொன்னபது, அந்த மூத்த திருநங்கை செயல்பாட்டர், “இது உனக்கே கொஞ்சம் ஓவரா இல்லயா வித்யா” என்று கூறிவிட்டு சிரித்தார், அவரை தொடர்ந்து அந்த நிருபரும் சிரித்துவிட்டு கடந்து சென்றார். பிறகு சில திருநங்கைகள் நடத்தும் தொண்டு நிறுவன கூட்டங்களிலும் எனது இடஒதுக்கீடு, திரைப்படங்களில் திருநர் பிரதிநிதித்துவம் போன்ற கோரிக்கைகள், சக திருநங்கைகளால் மலினப்படுத்தப்பட்டு, ஒரு முட்டாப்புன்னகை போன்றே நடத்தப்பட்டேன்.
ஒருவழியாக, 2010க்கு பிறகு கல்வி/வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை, வட மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் சில இளந்திருங்கைகளாலும் புரிந்து கொள்ளப்பட்டு பொதுவிவாதங்களில் மீண்டும் இடம்பெறத் துவங்கியது. இடஒதுக்கீடு என்பது பிரபலமான பேசுபொருளான பின் அன்று என்னை ஏளனமாக பேசிய தொண்டு நிறுவன போராளிகள் மெல்ல இடஒதுக்கீட்டு கோரிக்கையை வணிகமாக்கிக்கொண்டனர். எப்படியோ இடஒதுக்கீடு ஒரு கோரிக்கையாக வழுப்பெற்றதில் மகிழ்ந்தேன்.
இதுவேதான் திருநங்கை என்ற சொல்லுக்கும் பொருந்தும், அப்போது திருநங்கை, திருநம்பி, திருநர் என்று அழைக்க வேண்டுமென முன்வைத்த என்னை, இதே மூத்த தொண்டுநிறுவன முதலாளிகள், அரவான் தான் கடவுள், நாங்க அரவானிகள் தான் என்று கூட்டுப்பிரச்சாரம் செய்து வந்தனர். முத்தமிழறிஞர் கலைஞர் அதிகாரப்பூர்வமாக திருநங்கை என்று அழைக்க வேண்டுமென்று அறிவித்தப் பின்னர், மெல்ல அரவானி என்னும் வழக்கொழிந்து திருநங்கை, திருநம்பி, திருநர் என்னும் சொல்லாடல்களும் பொதுப்புழக்கத்திற்கு வந்தது. இப்போதும், சில எலிட் NGO போராளிகள், மாறிய பாலினம், மாற்றுப்பாலினம் என தனி ஆவர்த்தனம் வாசிப்பதுண்டு.
திருநம்பிகளை, பாலாதிக்க சமூகத்தை விட ஏளனமாகப்பார்க்கும் கூட்டம் தான் இந்த ஜமாத் ராணிகள். நம்மலே, பொம்பளயா மாறனும்னு கஷ்டப்பட்டு வரோம், இந்த பொம்பளைன்க்களுக்கு என்ன கேடுன்னு ஆம்பளயாகுறாளுக என்று பேசிய கூட்டம் இடையில் கொஞ்சம் காலம், திருநம்பிகளையும் உப்புக்குச் சப்பானியாக சேர்த்துக்கொண்டது. இன்று, அதுவும் போயிருச்சு, இது திருநங்கையர் கொள்கை தான், திருநர் கொள்கை இல்லை. திருநர் நலவாரியத்தில் ஏற்கனவே ஓரங்கட்டுப்பட்டு வந்த திருநம்பிகள், இனி மெல்ல சுத்தமாக துடைத்தெடுக்கப்படுவர். இனிவரும் காலங்களில் திருநம்பிகள் தனியாக கொள்கை வேண்டும் என்றும் போராட வேண்டியிருக்கும்.
இந்த கதையெல்லாம் இப்போ ஏன்னா, தமிழ்நாடு மாநில திருநர் கொள்கை மன்னிக்கவும், திருநங்கையர் கொள்கை என்று கொண்டுவந்துள்ளனர். அனைவருக்குமான அரசு என்று பல திட்டங்களை கொண்டு வந்த தமிழ்நாடு அரசு, முதலில் பால்புதுமையினர் அனைவருக்குமான கொள்கை என்பதை முன்மொழிந்தது, அதை ஜமாத் கொள்ளைக்காரிகள், தொண்டுநிறுவன அதிபர்கள், எலிட் போராளிகள் ஒன்று கூடி சாதி ஒழுப்புத் தலைவர் திருமா முதல் சாதிய கட்சியின் நிழல் தலைவி சௌமியா அன்புமணி வரை பலரிடம் லாபி செய்து, ( சமபால் ஈர்ப்பாளர்கள் என்பவர்கள், மூத்திர சந்தில் நின்று ஆண்களின் குஞ்சுகளை கடிக்கும் காமவெறியர்கள், அவர்களின் ஒற்றைத் தேவை கட்டற்ற பாலியல் சுகம், திருநங்கைகளான் நாங்கள், பிறவி கன்னிகாஸ்திரிகள், சமூகத்திற்காக உழைக்கும் அன்னை தெரசாக்கள், எங்களை எப்படி இந்த பாலியல் வெறியர்களுடன் ஒன்று சேர்க்கலாம்? என்று ஒரு விசமப்பிரச்சாரம் செய்தனர்.
அதேவேளையில், கல்வி, வேலைவாய்ப்பு பற்றிய புரிதலற்ற, ஜமாத்தின் கீழ் பாலியல்/பிச்சை தொழில் செய்யும் திருநங்கைகளிடம், திருநங்கைகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை கே, லெஸ்பியன்ஸுக்கும் தரப்போகிறார்கள், நம் வாய்ப்பு பரிபோகப்போகிறது என்று மலினாமான பொய்ப்பிரச்சாரத்தை ஏற்படுத்தி, அவர்களையும் முட்டள்களாக்கிவிட்டு, இப்போது போராடி, அனைவருக்குமான பாலிசியை முறியடித்துவிட்டு, திருநர் கொள்கையை கொண்டு வந்துவிட்டனர். ஆனால், வேலைவாய்ப்பு? இடஒதுக்கீடு? பிம்பிலிக்கா… பிலாப்பி......
ஆமாம், இதுதான் தொண்டு நிறுவன போராளிகள் மற்றும் ஜமாத் கொள்ளைக்காரிகளின் தேவை. இந்த 40 மூத்த திருநங்கைகள் இனி TNPSC க்கு படித்து, தேர்வாகி வேலைக்கு போகப்போவதில்லை. இவர்களின் மூல வருமானம் கல்வி வேலைவாய்ப்பின்றி, பிச்சை மற்றும் பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகள் தான். திருநர் கொள்கை, அதை கண்காணிக்கும் நலவாரியம் முழுக்க, முழுக்க இந்த ஜமாத், தொண்டு நிறுவன மூத்த திருநங்கைகளின் கைகளில் இருக்கும்பட்சத்தில் பெரும்பான்மை இளந்திருநங்கைகள் இவர்களை அண்டித்தான் இருக்க வேண்டும். திருநங்கைகளின் நலனுக்கு முன்னோடியான மாநிலமே, மறைமுகமாக திருநங்கைகளின் கெடுதலுக்கும் வழியாவதற்கு, பழியாகிவிட்டது.
இனி வரும் திருநர் தலைமுறை, சூதானமாக, படிக்கும் வயதிலேயே, குடும்பத்துடன் இருந்து படித்து, நல்ல வேலையைத் தேடி செட்டில் ஆன பின் திருநங்கை அல்லது திருநம்பி என வெளியே வந்து தங்கள் வாழ்க்கையை தகவமைத்துக்கொண்டால் தான் உண்டு. அப்போது தான் நிலை மாறும்.
ஆகவே, தற்காலிகமாக, maybe நிரந்தரமாகக்கூட இருக்கலாம். இனி நான் திருநருக்கான கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்று புலம்புவதை நிறுத்திக்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
பிச்சை எடுத்து, பாலியல் தொழில் செய்து, மற்றவர்களையும் அதில் தள்ளி, அதிக லாபம் பார்க்க முடியும், அதுவே போதும் என்று பெரும்பான்மை திருநங்கைகள் முடிவு செய்தால், நாம் யார் அதை மாற்ற? எனக்கு தமிழ்நாட்டில் என்ன இடம் இருக்கிறதென்று நான் ஏன் இதை தலையில் தூக்கி சுமக்க வேண்டும்.
இந்த மொத்த குழுப்பத்தில் இன்னும் அதிகம் பாதிக்கப்ப்டப்போவது, திருநம்பிகளும், மற்ற பால்புதுமையினரும் தான், இனிவரும் காலங்களில் திருநம்பிகள் தனியாக கொள்கை வேண்டும் என்றும் போராட வேண்டியிருக்கும். அப்போதேனும், வலித்தால் அவர்கள் குரல் வழுக்கும், அந்த குரல் வழுக்கும்போது துணை நிற்போம். அவ்வளவே... Bye!!
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @ThamizhachiTh @thirumaofficial @cpimspeak @Neghatrans @Srividhya_Hari @srikri_a @sarathy__g @ambedkariteIND @TThenarasu @QCChronicles @chennaipride @thenewsminute @NadjaNadika @Ranjith_Rayappa @U2Brutus_off @puppykutty4u @Schumy_Official @NaduViral