தலைமைக் கழக வழக்கறிஞர் - தி.மு.க | 12 - வது வார்டு மாமன்ற உறுப்பினர் - பெருநகர சென்னை மாநகராட்சி | #திருவொற்றியூர் | வெல்லும் #திராவிடம் 🌅🖤❤️

Joined November 2015
2,801 Photos and videos
Pinned Tweet
சென்னை மாநகராட்சி 12-வது வார்டு மாமன்ற உறுப்பினராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டேன். மக்களின் முதல்வர் தலைவர் @mkstalin, இதயம் நிறைந்த அண்ணன் @Udhaystalin என் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். வாழ்க தலைவர்! வெல்க திராவிடம்! #சென்னைமாநகராட்சி12ல்_கவிகணேசன்
41
76
403
2026 தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சென்னை மண்டலம் 1-க்கான பெருநகர சென்னை மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில் பங்கேற்று; கழக அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களையும், அதனால் விளைந்த நன்மைகளையும், புதிய ஆட்சியாளர்களால் அனைத்துப் பணிகளும் முடங்கிப் போய் ஸ்தம்பித்து நிற்கும் நிர்வாக சீர்கேட்டையும் எடுத்துக்கூறி, அன்றாடம் மக்களோடு பயணிக்கும் மக்களைச் சந்திக்கும் மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறியும் மாமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொய்வின்றி தொடர உரிய ஒத்துழைப்பு நல்குமாறு வலியுறுத்தினேன். @mkstalin @Udhaystalin @arivalayam #நம்ம_திருவொற்றியூர் #DravidianModel #DMK
1
3
3
30
மேகதாட்டில் அணை கட்டுவதற்கு அனைத்து முன்னெடுப்புகளையும் மும்முரமாய் எடுக்கிறது கர்நாடக அரசு!கடந்த கழக ஆட்சியில் நம்முடைய கடுமையான எதிர்ப்புகளால் அதைப் பற்றி பேசக்கூட தயங்கிய காங்கிரஸ்காரர்கள்; இப்போது குளிர்விட்டுப் போனதால் கூவத் தொடங்கி இருக்கிறார்கள், நமக்கு வாய்த்த கோமாளி அரசோ அதைக் கண்டு கொள்ளவும் இல்லை காட்டமான எதிர்வினையும் ஆற்றவில்லை இந்த லட்சணத்தில் இவர்களுக்குள் கூட்டணி ஒரு கேடு!😡 @mkstalin @Udhaystalin @arivalayam #TVKFails
3
9
147
பொய்யையும், புரட்டையும், ஆதாரமற்ற அவதூறுகளையும் அள்ளி வீசி அப்பாவி பொதுமக்களை ஏமாற்றி கவர்ச்சியால் அடைந்த வெற்றியென்பது காட்சிப்பிழையால் நடந்த ஆட்சிப் பிழை! விரைவில் பொய் வேஷம் கலையும், உண்மைகள் புரியும், அவசர கதியில் மக்கள் அளித்த தீர்ப்பை அவர்களே பரிசீலனை செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை! @mkstalin @Udhaystalin @arivalayam #TVKFails
1
3
24
Kaviganesan Veeraswamy retweeted
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார். இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார். மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்! #NitiAyog #DravidianModel
1,141
5,074
9,954
571,932
நேற்று பெய்த மழையில் இன்று பூத்த காளான்கள் போல் இல்லாமல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு போற்றி வளர்த்த காஞ்சித்தலைவனாம் பேரறிஞர் பெருந்தகையின் பெருமைமிகு ஆளுமையால் முகிழ்த்தெழுந்து; முத்தமிழறிஞர் கலைஞரால் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போராட்டமும் தியாகமும் சுமந்து இன்றும் கழகத் தலைவரால் களத்தில் நிற்கும் கம்பீர கோட்டைதான் திமுக!🔥🌄🖤❤️ @mkstalin @Udhaystalin @arivalayam #DravidianModel #DMK
4
7
66
Kaviganesan Veeraswamy retweeted
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD. Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country. Wishing you good health and happiness. @yadavtejashwi
105
1,546
8,441
79,049
Kaviganesan Veeraswamy retweeted
அண்ணா உருவாக்கிய தாய்க்கழகத்திற்குத் திரும்பி வரும் அனைவரையும் வரவேற்கிறேன்! முன்னாள் அமைச்சர் திரு.பென்ஜமின் அவர்களுக்கு வாழ்த்துகள்!
134
1,342
5,270
89,928
Kaviganesan Veeraswamy retweeted
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்! ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது. உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்! #DMK4TN
Jun 10
மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன், ம.சுகன்யா - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 4 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 40 இலட்சம் ரூபாயினை இன்று (10.6.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார். இதுவரை 22 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார். அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் ஆகிய 18 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து; தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் தனது மனைவி ம.சுகன்யா ஆகியோர், 09.12.2025 அன்று உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோடு காக்கில்சிக்கையன்பட்டி பண்டாரம் களம் அருகில் அவர்கள் சென்ற இருசக்கரம் வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கடந்த 20.11.2025 அன்று சென்னிமலையிலிருந்து இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் சென்னிமலை, பெருந்துறை ரோடு, எஸ்எல்என் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது வேன் மோதி விபத்தில் சிக்கியும் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் அவர்கள், 10.07.2025 அன்று ஓசூருக்கு வேலை செல்வதற்காகபிளப்பநாயக்கஅள்ளி - ஏ.பாப்பாரப்பட்டி ரோட்டில் எட்டியாம்பட்டி ஏரி மதகு அருகே அவர் சென்ற இருசக்கரம் வாகனம் மீது எதிரில் வந்த மினி லாரி மோதி விபத்தில் சிக்கியும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்கள், 30.10.2025 அன்று ஜி.எஸ்.டி.சாலை, இருங்குன்றம்பள்ளி பாலாறு பாலம் அருகே அவர் வந்த இருசக்கர வாகனம்மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 4 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - திருமதி ம.சுகன்யா ஆகியோரின் மகன் எம்.கௌதம் அவர்களிடமும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மனைவி திருமதி ஜி.சவிதா அவர்களிடமும் – தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் அவர்களது மனைவி திருமதி எஸ்.நதியா அவர்களிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி சபிதா அவர்களிடமும் இன்று (10-06-2026) காலை வழங்கினார்.
87
1,118
3,005
61,650
Kaviganesan Veeraswamy retweeted
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்! தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன. அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது. பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்! திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வகையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
102
1,589
6,538
109,399
Kaviganesan Veeraswamy retweeted
Heartfelt birthday wishes to @RJDforIndia's National President Thiru @laluprasadrjd Avargal. May you continue to guide India in upholding the ideals of secularism, social justice and federalism. Wishing you good health, happiness and a peaceful life in the years ahead. @yadavtejashwi
41
506
2,128
27,552
Kaviganesan Veeraswamy retweeted
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற, கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியண்ணன் அரசு அவர்களின் அன்பு மகள் அ.அமிர்தா - கி.ஜித்தேன்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்கள். @regupathymla @kkchellapandian @SMeyyanathan
17
133
488
30,737
Kaviganesan Veeraswamy retweeted
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி. அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார். இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார். இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார். ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர். 'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது. குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார். Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா? இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்? ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
446
3,097
5,703
339,788
Kaviganesan Veeraswamy retweeted
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம். சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர். எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர். எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும். பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார். #Bharathiraja
44
674
2,560
37,050
Kaviganesan Veeraswamy retweeted
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது. மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு! ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். #PressFreedom
1,048
2,790
6,731
574,905
'இடிப்பாரே இல்லா மன்னன் கெடுப்பாரின்றி தானே கெடுவது போல்' தன்னை விமர்சிக்கும், உண்மையை உரக்கச் சொல்லும் நடுநிலையான ஊடகங்களை முடக்கப் பார்க்கும் முகமூடிகளின் அரசை மக்களே தோலுரிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!😡 @mkstalin @Udhaystalin @arivalayam #DMK #TVKFails
1
42
தமிழ் ரசிகப் பெருமக்களுக்கு மண் மணம் மாறாத, மறக்க முடியாத மண்வாசனை படங்கள் தந்து கல்லுக்குள் ஈரமாய்,கடலோரக் கவிதைகளாய் கல்வெட்டு காவியங்கள் படைத்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்!🙏🏿 @mkstalin @Udhaystalin #RIP
18
சிறு பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு சிறுபிள்ளைத்தனமான ஆட்சிக்கு வழி வகுத்து; பெருந்தொல்லைக்கு ஆளாகி இருக்கும் அப்பாவி மக்களின் தப்பான கணிப்பிற்கு தமிழ்நாடே தத்தளிக்கிறது.. மக்கள் மன்றத்தில் மௌனம் காக்கும், நாட்டின் நான்காவது தூணான பத்திரிகை ஊடக நண்பர்களைக் கண்டாலே பயந்து நடுங்கும் சி.எம்.சாரின் கருப்புச்சாயம் வெளுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை!😡 @mkstalin @Udhaystalin @arivalayam @dmk_raja #TVKFails
1
1
43
Kaviganesan Veeraswamy retweeted
ஆட்சி அதிகாரம் எந்தப் பக்கம் இருந்தாலும் கொள்கையில் உறுதிமிக்கோர் எப்போதும் தி.மு.க. பக்கம்தான்! தமிழ்நாட்டின் உரிமைகளைத் தி.மு.க.தான் காப்பாற்றும் என்ற உறுதியோடு, செங்கல்பட்டு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. கஜேந்திரன் அவர்கள் தலைமையில் தாய்க்கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரையும் வரவேற்கிறேன்.
225
1,835
5,668
117,754
Kaviganesan Veeraswamy retweeted
Replying to @arivalayam
14
265
632
4,619
அரண்மனையை அடைந்து விட்டதால் ஒரு கோமாளி கோமகன் ஆகிவிட முடியாது! சட்டசபையை சர்க்கஸ் கோமாளிகளின் கூடாரமாக மாற்றி விட்டோமே என்று மாற்றம் விரும்பி ஏமாற்றமடைந்த மக்களும் உணரத் தொடங்கி விட்டார்கள்.. விரைவில் விட்டில் பூச்சிகளுக்கு விடையளித்து, விடியல் சூரியன் முளைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! 🔥🌄🖤❤️ @mkstalin @Udhaystalin @arivalayam #DravidianModel #DMK
3
43