மோடி பிரதமராகி 12 ஆண்டுகள் ஆகின்றன.
இந்திய மாநிலங்கள் முழுமைக்கும் பயணிக்கிறார். அப்போதெல்லாம்
இந்திய நாட்டுக்கு அவர்,
செய்த நன்மைகள் குறித்து ஒரு வார்த்தையும் பேசுவதில்லை.
செல்லும் இடமெல்லாம் எதிர்க்கட்சிகளை தூற்றுவது அல்லது உண்மைக்கு மாறான செய்திகளை வாரி இறைப்பது... இதுதான் பிரதமரின் கடந்த கால சுற்றுப்பயணங்களின் சுருக்க வரலாறு.
கடந்த வாரம் கூட தமிழ்நாட்டுக்குக் மோடி வந்திருந்தார்.
அப்போது தமிழ்நாட்டுக்கு அவர் தீட்டிய திட்டங்கள் குறித்து ஏதாவது பட்டியலிட்டாரா? இல்லை.
மாறாக திராவிட மாடல் அரசு மீது இல்லாததையும் பொல்லாததையும் அவதூறுகளாக அள்ளி வீசி மட்டுமே சென்றார்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் மோடி சொன்னார், "கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லையாம்.
அத்துடன்,
'தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை' என்றும் கூறிவிட்டு சென்றுள்ளார் பிரதமர்.
அதே வேளையில ,
"தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களை அச்சமின்றி வாழ வைப்போம்'என்று உத்தரவாதம் அளித்திருக்கிறார் மோடி
ஐயா மோடி அவர்களே!
இதை மணிப்பூரில் போய் சொல்ல உங்களுக்கு தைரியம் உண்டா?
இதை உ.பி.யில் போய் உங்களால் சொல்ல முடியுமா?
ஒரு குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக தமிழ்நாடு இருக்கிறதாம்.
அதானி குடும்பத்துக்கான ஏ.டி.எம். மிஷினாக இந்தியாவை மாற்றியதுதானே உங்கள் சாதனை?
உலக நாடுகளுக்கு எல்லாம் நீங்கள் பயணம் சென்று திரும்பியவுடன், நீங்கள் சென்ற அதே நாடுகளுக்கு அடுத்த விமானம் பிடித்து செல்லும் அதானி, அங்கு பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவனங்களை தொடங்கும் மர்மம் என்ன என்பதை சொல்வீர்களா பிரதமர் அவர்களே?
'விவசாயிகளுக்கு தானிய சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குவோம்' என்ற வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை' என்று பேசி இருக்கிறார் பிரதமர்.
சேமிப்புக் கிடங்குகளை உருவாக்கியதாக தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கி இருப்பதே உங்கள் தலைமையிலான ஒன்றிய அரசு தானே ?
டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காக தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.
100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.359 கோடியில் மேல் கூரையுடன் நெல் சேமிப்புத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2011–2021 ஆகிய பத்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த சேமிப்புக் கிடங்குகளின் கொள்ளளவு 7 இலட்சத்து 27 ஆயிரத்து 650 மெட்ரிக் டன். ஆனால் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்ட 4.03 இலட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மற்றும் கட்டப்படவுள்ள கிடங்குகளின் கொள்ளளவையும் சேர்த்தால் 7 இலட்சத்து 33 ஆயிரத்து 350 மெட்ரிக் டன் ஆகும்.
இந்தப் புள்ளிவிபரத்தைக் கூட கேட்டுத் தெரிந்து கொள்ளாமல், அவதூரை அள்ளி வீசும் மோடி அவர்களே..
பொய் பேசுவதையே பிழைப்பாக வைத்திருப்பது, நீங்கள் வகிக்கும் பதவிக்கு பெருமையாகாது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புல்லட் ரயில் திட்டம் வைத்துள்ளதாக தேர்தல் நடக்கவுள்ள இந்த நேரத்தில் நீட்டி முழக்கி உள்ள மோடி அவர்களே,
மதுரைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தந்தீர்களா?
திருச்சிக்கு மெட்ரோ ரயில் கேட்டோம்.
பெப்பே காட்டினீர்கள்.
கோவைக்கு மெட்ரோ ரயில் கேட்டோம். தரவில்லை.
சென்னைக்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு முழுமையான நிதியை கேட்டோம். தரவில்லை.
இந்த லட்சணத்தில் புல்லட் ரயில் விடப் போவதாக ரீல் சுற்றுகிறீர்கள்.
12 ஆண்டுகளாக நீங்கள் காட்டும் பயாஸ்கோப்பை பார்த்து பார்த்து எது நிஜம் எது பித்தலாட்டம் எது என்பதை புரிந்து கொண்டிருக்கிறோம்.
இனியும் ஏமாற்ற துணியாதீர்கள்!
#ModiPromises
#ElectionPromises
#FalsePromises
#ModiGovernment
#PoliticalDrama
#PeopleWillDecide
#VoteForTruth
#IndiaPolitics
#QuestionTheGovernment
#PoliticalAccountability
#DemocracyFirst
#ElectionReality
#PeopleVsPropaganda
#IndiaDecides
#SpeakUpIndia