ஒன்றிய அரசின் விவசாயிகள், தொழிலாளர், ஜனநாயக விரோத கொள்கைகளை எதிர்த்து,INTUC, AITUC, HMS, CITU உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புகள்
இணைந்து
இன்று (12.02.26) வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. நாடு தழுவிய இந்த போராட்டத்தில் சுமார் 30 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என போராட்டக்காரர்கள் கூறியிருக்கின்றனர். நாடு முழுவதும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒன்றிய அரசுக்கு எதிராக தொழிலாளர்கள் கூட உள்ளனர்.
தொழிற் சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.
மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல்,
தொழிற்சங்கங்களோடு முறையாக கலந்து ஆலோசிக்காமல்,
ஒன்றிய அரசாங்கம் தன்னிச்சையாக , நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றிய நான்கு தொகுப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கை.
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களான தொழிலுறவு சட்டத் தொகுப்பு 2000, சம்பளத் தொகுப்பு 2019, பணித்தலப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பு 2020, சமூகப் பாதுகாப்பு தொகுப்பு 2020 போன்றவை தொழிலாளர்களின் ஊதியப் பாதுகாப்பு, வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகிய மூன்றையும் கேள்விக்குறி ஆக்குவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டி இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வரைவு விதை மசோதா, மின்சார திருத்த மசோதா மற்றும் SHANTI சட்டம், பொதுத்துறைகள் விற்பனை ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்,
அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீட்டெடுத்து 100 நாட்களை முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டும், 'விக்ஸித் பாரத் - ரோஜ்கார் அவுர் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம் 2025' ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது போன்ற
தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது போன்ற இந்த கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றன.
போராட்டம் வெற்றி பெற வேண்டும். தொழிலாளர் வாழ்வு வளம் பெற்று, நாடு நலம் பெற வேண்டும்.
#StopAntiPeoplePolicies
#FarmersProtest
#WorkersRights
#AntiPeopleGovt
#IndiaProtests
#SaveFarmers
#SaveWorkers
#VoiceOfPeople
#Democracy
#UnitedWeStand